ஜனாதிபதி, பிரதமர் இல்லாத நிலையில் பசில் தலைமையில் அவசர சந்திப்பு!
2022ம் ஆண்டிற்கான அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (14) அலரிமாளிகையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள நிலையிலும், பிரதமர் ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்திருந்த நிலையிலும் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சந்திப்பு இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இது எனது கருத்து. நான் கணக்கு வைத்திருப்பவனாக இருந்து, ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், எனது வங்கிக்குச் செல்வேன். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினராக உள்ளது.
எனவே, தீர்வுகளுக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. தேவையான முடிவை அரசு எடுக்கும்,'' என்றார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
