நீதிமன்ற விசாரணைகளுக்கு அஞ்சும் பசில் - அநுர தரப்பு தெரிவிப்பு
முன்னாள் அமைச்சர் பசில் ராபஜக்ச நீதிமன்ற விசாரணைகளுக்கு அஞ்சுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொறுப்புவாய்ந்த அரசியல்வாதிகள் என்ற வகையில் சட்டத்தின் முன் நிற்பதற்கு பதிலாக, அரசியல் கண்காட்சிகளை நடத்தி விசாரணைகளை தவிர்த்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பல்வேறு அரசியல் கண்காட்சிகளை நடத்தி விசாரணைகளை காலம் தாழ்த்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றின் மீது நம்பிக்கை வைத்து குற்றப் புலனாய்வு பிரிவின் எதிரில் வாக்கு மூலம் அளிக்கப்பட வேண்டுமென நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் வழக்கு விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர் ஓருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 16 மணி நேரம் முன்
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam