தொடர் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகும் யாழ். சட்டத்தரணிகள் சங்கம்: வலுக்கும் நீதிபதி விவகாரம்
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு நேற்றைய தினம்(02.10.2023) ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக எதிர்வரும் இரு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தீர்மானித்துள்ளனர்.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
மேலும் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு,
“முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தால் எடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பில் இன்றைய தினம்(03.10.2023) இணைவதுடன் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் முல்லைத்தீவு சென்று நீதிமன்றத்தின் முன்னால் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
நீதி துறைக்கு ஏற்பட்ட இந்த அச்சுறுத்தலை கண்டித்து அடுத்து வரும் இரண்டு வாரங்கள் கறுப்பு நிறத்திலான முகக்கவசங்களை அணிந்து கடமையில் ஈடுபடுத்தல்.
தமிழ் கட்சிகளினால் மருதனார்மடம் முதல் யாழ்ப்பாணம் வரை குறித்த நீதிபதிக்கு எதிரான அச்சுறுத்தல்களைக் கண்டித்து 4ஆம் திகதி நடத்த இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவை தருவதுடன் அதில் அனைத்து சட்டத்தரணிகளும் பங்கு கொள்ள வேண்டும்.
இன்றும் நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பதுடன் இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கை தொடர்பான விசேட பொதுக்கூட்டத்தினை எதிர்வரும் 4ஆம் திகதி நடாத்துதல்.
கௌரவ நீதிபதிக்கு ஏற்பட்ட அச்சுறுத்த தொடர்பில் பாரபட்சமற்ற உரிய சுயாதீன விசாரணை செய்யப்பட வேண்டியதுடன் எச்சந்தர்ப்பத்திலும் நீதித்துறை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” போன்ற முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

இலங்கை புலனாய்வுத்துறையை முறியடித்த மற்றுமொரு புலனாய்வுத்துறை! நீதிபதி சரவணராஜா வெளியேறியதில் நடந்தது என்ன..(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
