பண்டாரகம பகுதியில் கோர விபத்து - ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
பண்டாரகம, வல்மில்ல பகுதியில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டி பண்டாரகமவில் இருந்து கெஸ்பேவ நோக்கி பயணித்த போது எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒரே நேரத்தில் வீதியை கடக்க முச்சக்கரவண்டி சாரதி அதனை தவிர்க்க வலப்புறம் திருப்பி மோட்டார் சைக்கிள் முன்பக்கத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து இடம்பெற்றவுடன் பிரதேசவாசிகள் உடனடியாக ஸ்தலத்திற்கு வந்து காயமடைந்த ஐந்து பேரையும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
