பெல்ஜியம் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய தமிழர் திருயாத்திரை
பெல்ஜியம் - பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய தமிழர் திருயாத்திரை மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய தமிழர் திருயாத்திரை பெருவிழா எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் இந்த பெருவிழாவினை ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மாலை 06.30 மணிக்கு அன்னை காட்சி கொடுத்த சிற்றாலயத்தில் சிறப்பு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து நீர் ஊற்றை நோக்கிய மெழுகுதிரி பவனி ஆரம்பமாகும் என்று ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
சிறப்பு வழிபாடுகள்
மறுதினம், சனிக்கிழமை காலை 10 மணிக்கு குணமளிக்கும் நற்கருணை ஆராதனையும், மதியம் அன்னையின் திருச்சொரூப பவனியும், அன்னையின் நீர் ஊற்றில் இறுதி ஆசியும் இடம்பெறுவதோடு அதன் பின்னர் மருதமடு அன்னை திருச் சொரூபத்திற்கு முன் பிரார்த்தனையும் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் சிறப்பு திருநாள் பெருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
இதேவேளை, குணமாக்கும் வழிப்பாட்டினையும், சிறப்பு பெருவிழா திருநாளையும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்னையின் அருளை பெறவும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் மருதமடு அன்னையின் ஆசீரை பெறவும் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றனர்.









சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
