அரசின் முடிவுகள் ஆபத்தானதால் வங்கிகள் நெருக்கடியில்: பேராசிரியர் தகவல் (Video)
இலங்கையில் வங்கிகள் அழுத்தத்தில் இல்லை என யாராவது கூறினால் அதை நான் மறுதலிக்கிறேன் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை கலாநிதி கோ.அமிர்தலிங்கம் கூறியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
வங்கிகள் தொடர்பில் பல பிரச்சினைகள் உள்ளன.அரச நிறுவனங்கள், நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் அனைத்திற்கும் நிதியளிப்பு செய்வது இந்த அரச வங்கிகள் தான்.
இதனால் நட்டங்கள் அனைத்தையும் அவை தங்கி கொண்டிருக்கின்றன. அவற்றுக்கான கொடுப்பனவுகள் தாமதமடைகின்றன. அரச ஊழியர்களுக்கான சம்பளம் கூட இந்த அரச வங்கிகள் ஊடக தான் செல்கின்றன.
மேலும் தற்போது வங்கிகள் கொடுக்கடன்களை குறைத்துவிட்டு 25 வீத வட்டி அளவில் வைப்புக்களை மாத்திரம் வைத்துக்கொள்கின்றன.அதனூடாக பணம் திரட்டுகின்றன. இவ்வாறு திரட்டும் பணத்தை திரைசேரி உண்டியல் ஊடாக அரசாங்கத்திற்கு கடனை வழங்குகின்றது. அது போதாவிட்டால் தான் அரசாங்கம் பணத்தை அச்சிட முற்படுகின்றது என கூறியுள்ளார்.