வங்கிக்குள் நுழைந்து பெருந்தொகை பணம் கொள்ளை! பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
அவிசாவளை, மாரம்பே கிராமிய வங்கிக்குள் நுழைந்து சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் அடங்கிய பெட்டகத்தை திருடிய சந்தேகநபர்களை அடையாளம் காண அவிசாவளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 3ம் திகதி காலை, வங்கியின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த 3 பேர், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அங்கிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், அவர்கள் சிசிடிவி காட்சிகளில் இருந்து மறைவதற்காக, மூன்று பேரும் குடையை உயர்த்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதுடன்,சுமார் 40 நிமிடங்கள் வங்கியில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
வெளியான புகைப்படங்கள்
இதற்கமைய, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்ற ஆவணக்காப்பகத்தின் கலைஞர்களால் இரண்டு நபர்களின் புகைப்படங்கள் வரையப்பட்டுள்ளன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பெட்டகத்தை திருடிய திருடர்கள் கும்பல், அவிசாவளை ஊடாக மெஹலகம நோக்கி வானில் பயணித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்களை கைது செய்வதற்காக, அவிசாவளை பொலிஸாரின் குற்றப்பிரிவுக்கு மேலதிகமாக, சீதாவகப் பிரிவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718592425, 0718593754, 0718591423, 0362222380 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சீதாவக்க பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.ஜே. அவிசாவளை தலைமையக பிரதான பரிசோதகர் ஜே. ம.பொ.சி. ஜயலத்தின் அறிவுறுத்தலின் பேரில் பல குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
