ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும்! ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகள் சீர்குலைந்தால் ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் (04.08.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
கடன் நீடிப்பு
மேலும் கூறுகையில், இந்நாடு வங்குரோத்து நாடு, தற்போதைய அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை தீர்த்து கொண்டு முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடன் நீடிப்பு முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.
கடந்த காலங்களில் நாட்டிற்கு வருகைத் தந்த தலைவர்களுடனும் அது குறித்து கலந்துரையாடினோம். கடன் நீடிப்பின் பின்னரும் எமது கடன்களை மீளச் செலுத்தாமல் இருக்க முடியாது. கடன் மீள்செலுத்துகைக்கான காலத்தை நீடித்துக்கொள்வதை மாத்திரமே செய்ய முடியும்.
அதேபோல் அத்தியாவசிய பொருட்களில் இறக்குமதிக்கு அவசியமான கடன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். அந்த கடன்களை செலுத்துவதற்கான முறைமையொன்றும் அவசியம். தற்போது உள்ள சம்பிரதாய பொருளாதார முறையினால் அதனை செய்ய முடியாது.
அதனால் போட்டித்தன்மை மிக்க ஏற்றுமதி பொருளாதாரத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். இருப்பினும் அதற்கு முன்னதாக கடன் விவகாரங்களை நாம் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு
அதுகுறித்த யோசனைகளை அமைச்சரவையில் சமர்பித்துள்ள அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.
அதேபோல் பல்வேறு தரப்புக்களிடத்தில் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். பின்னர் அந்த யோசனைகளை நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்தோம். நாடாளுமன்றம் அரச நிதிக் குழுவிடம் ஆலோசித்த பின்னர் அதனை ஏற்றுக்கொள்வதற்கான யோசனை அரச நிதிக் குழுவினால் முன்வைக்கப்பட்டது.
கடன் நீடிப்பு பணிகளை செப்டெம்பர், அக்டோபர் மாதமளவில் நிறைவுச் செய்ய எதிர்பார்த்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான யோசனைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கடன் நீடிப்பு பணிகளை செப்டெம்பர், அக்டோபர் மாதமளவில் நிறைவுச் செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த வேலைத்திட்டம் தடைப்பட்டால், வெளிநாடுகள் இலங்கையுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடாது என்பதால் மீண்டும் நாட்டிற்குள் எரிபொருள் வரிசை, உரத் தட்டுப்பாடு என்பன உருவாகும் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
