அரசாங்கத்தை பதவி விலக கோரி வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டம் (Photos)
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தட்டுப்பாடு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று அனைத்து மக்களும் கடும் பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றனர். இதனால் வங்கி வலையமைப்பிற்கும் பாதிப்பு ஏற்படும் அபாய நிலைமை காணப்படுகின்றது.
எனவே நாட்டையும், மக்களையும் படுகுழியில் தள்ளிய இந்த அரசு உடனடியாக பதவி விலகவேண்டும். இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டியது அனைவரது தலையாய கடமை. அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊழல்களால் உழைத்த பணத்தை மக்களின் உடைமையாக்கு,
அரச நிறுவனங்களின் விற்பனையை நிறுத்து, வாழ்க்கை செலவை குறைத்திடு, வெளிநாட்டுப்
பண கறுப்புச்சந்தை மாபியாவை தடைசெய், விவசாயிகளிற்கு நிவாரணம் வழங்கு போன்ற
வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.




அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri