சொந்த மண்ணில் பங்களாதேஷிடம் தோல்வியைத் தழுவிய இலங்கை
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ரி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இன்றைய தினம் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணியை பங்களாதேஷ் அணி எட்டு விக்கட்டுகளினால் வீழ்த்தியுள்ளது.
இதன் மூலம் பங்களதேஷ் அணி போட்டித் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் வெற்றிகொண்டுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் பெத்தும் நிஷ்ஷங்க 46 ஓட்டங்களையும், தசுன் சானக்க 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மெஹதி ஹசன் இலங்கையின் நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 16.3 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கினை இலகுவில் எட்டியது.
பங்களாதேஷ் அணியின் சார்பில் தன்சீட் ஹசன் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களையும் அணித் தலைவர் லின்டன் தாஸ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
போட்டியின் ஆட்ட நாயகாக மெஹதி ஹசன் தெரிவு செய்யப்பட்டார்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
