இந்தியாவின் இராஜதந்திர பாதுகாப்புக்கு சவாலாக மாறிய பங்களாதேஷ்
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்குப் பின்னரும் அந்த நாட்டில் சர்ச்சை நிலை தொடர்வதால் இந்தியா இராஜதந்திர வெளிப்பாட்டை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
பங்களாதேஷின் நிலைமை இன்னும் தீவிரமாகியுள்ள நிலையில், பிராந்திய பாதுகாப்பு சவால்கள் பாரிய மறுவடிவமைப்புப் பயிற்சிக்கு உட்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
அண்டை நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வளர்ந்து வரும் சீனச் செல்வாக்கையும் அதன் அண்டை நாடுகளில் மேற்கத்திய சக்திகளின் பங்கையும் சமநிலைப்படுத்தவும் இந்தியா முயற்சித்து வருகிறது.
இந்தியாவிற்கு எதிரான கொள்கை
மேலும் நேபாளத்தின் புதிய பிரதராக பதவி ஏற்றுள்ள கட்க பிரசாத் சர்மா ஒலி நரேந்திர மோடி தனது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் இதுவரையில் அதற்கான பதிலை வழங்காத இந்தியா, இராஜதந்திர ரீதியிலான பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதற்கு பிரதான காரணம் கட்க பிரசாத் சர்மா ஒலி சீனாவிற்கு ஆதரவானதும், இந்தியாவிற்கு எதிரான கொள்கைகளையும் கொண்டு செயற்படுபவராவார்.
பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்
இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்களுக்கு ஒரு சவாலை முன்வைத்து, சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியில் கையெழுத்திடும் நேபாளத்தின் திட்டங்களை அவர் புதுப்பிக்கிறாரா என்பதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தெற்காசியா அரசியல் சமன்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளில் ஆட்சி மாற்றங்கள், அதிகார வெற்றிடங்கள், அரசியல் எழுச்சிகள் மற்றும் வெகுஜன எதிர்ப்புகள் உள்ளிட்ட பலவிடயங்கள் அந்நாட்டுக்கு சவாலாக மாறியுள்ளமை அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |