கடனை மீளச் செலுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கிய பங்களாதேஷ்
இலங்கை பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வழங்கியுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை அரசாங்கம், பங்களாதேஷிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக் கொண்டது.
கடுமையான நெருக்கடி நிலைமை காரணமாக கடன் மீளச் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்குமாறு இலங்கை, பங்களாதேஷிடம் கோரியிருந்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பங்களாதேஷ் மத்திய வங்கி, கடன் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் இந்த தகவல்களை வழங்கியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் இந்த தகவல்களை வழங்கியுள்ளார்.
முன்னதாக இணங்கப்பட்டதன் அடிப்படையில் மார்ச் மாதம் இந்த கடன் தொகையை செலுத்தியிருக்க வேண்டும் என்ற போதிலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையினால் மேலும் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இதன்படி பங்களாதேஷிடம் பெற்றுக் கொண்ட கடனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் மீளச் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.