பங்களாதேஷ் பொருளாதார நெருக்கடி: மேம்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சிகள்
தென்னாசிய பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியை கண்டு வந்த பங்களாதேஷில் தற்போது மாறுபட்ட நிலை தோன்றி வருகிறது.
இந்நிலையில் இலங்கையை போன்ற ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த நாட்டின் அரசாங்கம் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது.
ஏற்றுமதி பொருட்களின் கேள்வியில் குறைவு, அதிக பணவீக்கம், கொடுப்பனவின் வீழ்ச்சி, எரிசக்தி பிரச்சினை மற்றும் வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தில் குறைவு என்பன, தற்போது பங்களாதேஷ் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
சர்வதேச நாணய நிதியம்
இந்தநிலையில் நிலைமையை சீர்படுத்த, அந்த நாட்டின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை செய்துள்ளது.
மேலும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜப்பானின் ஜெய்க்கா
நிறுவனம் ஆகியவற்றின் உதவிகளுக்காகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தித்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.