ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு கண்காணிப்பில் உள்ள பங்களாதேஸ் அணி
பங்களாதேஸ் பிரீமியர் லீக்கில், தவறு செய்ததாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிரிக்கெட் சபையின் தலைவர் ஃபரூக் அகமது தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கைகள்
உறுதிப்படுத்தப்படாத மற்றும் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், போட்டி நிர்ணயம் தொடர்பில், எட்டு போட்டிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வீரர்கள் இந்த மோசடிகளின் கீழ் கண்காணிப்பில் இருப்பதாகவும், அத்துடன் நான்கு அணிகளின் உரிமையாளர்களின் செயற்பாடுகளும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் நாட்டின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
மோசடிக் கண்காணிப்பில் உள்ள 10 கிரிக்கெட் வீரர்களில், ஆறு பேர் பங்களாதேஸின் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இரண்டு பேர் வெளிநாட்டு வீரர்களாவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |