இலங்கை கிரிக்கட் அணியின் முதல் டெஸ்ட் அணியின் தலைவர் பந்துல வர்ணபுர காலமானார்
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர(Bandula Warnapura) காலமானார்.
68ஆம் வயதில் இன்றைய தினம் பந்துல வர்ணபுர காலமானார்.
இலங்கை அணி பங்கேற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கு பந்துல வர்ணபுர தலைமை தாங்கியியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் சார்பில் 4 டெஸ்ட் போட்டிகளிலும் 12 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் பந்துல வர்ணபுர விளையாடியிருந்தார்.
பந்துல வர்ணபுரவின் தலைமையிலேயே இலங்கை அணி முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி வெற்றியை பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மைய நாட்களாக வைத்தியசாலையில் பந்துல வர்ணபுர சிகிச்சை பெற்று வந்தார்.
எவ்வாறெனினும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் அவர் காலமானார்.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri