பண்டாரவளை - கபரகல தோட்டத்தில் மண்சரிவு (video)
பண்டாரவளை பகுதியில் அமைந்துள்ள கபரகலை தோட்ட வைத்தியசாலை பகுதியில் பெய்த அடைமழை காரணமாக மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த அனர்த்தத்தில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ள போதும் உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஆய்வு
காயமடைந்த 7 பேரில் இருவர் கொஸ்லந்த வைத்தியசாலையிலும், இருவர் தியதலாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதியில் இராணுவத்தினர் மீட்பு பணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இன்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





