கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறக்கப்பட்ட கருமபீடம் திடீர் மூடல்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் திறக்கப்பட்ட விசேட கருமபீடங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்திக் குழுவின் பரிந்துரையின் பேரில் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி இந்த விசேட கருமபீடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
கருமபீடம் திடீர் மூடல்
திறக்கப்பட்டு ஒரு மாதமான நிலையில் கருமபீடத்தை மூடுவது யாருடைய முடிவு என்பது தெரியவில்லை என சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டு நிறுவப்பட்ட விசேட கருமபீடத்தை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடுவது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் துறைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளை இவ்வாறு மீளப்பெற அனுமதிப்பது மோசமான முன்னுதாரணமாகும் என சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
You may like this video

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
