கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பிலும் அந்த நீதிமன்றங்களால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டதால், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பிலும் அவற்றைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய, ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு வருகை தந்த போது அவரை திருப்பி அனுப்ப குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்கவில் இருந்து கட்டார் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
