கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ். செல்வதில் பாரிய நெருக்கடி! நோயாளர்கள் ஆபத்தில் (VIDEO)
விமான நிலையங்களில் செயலணியில் ஈடுபடும் பலரது எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அது மாத்திரம் இன்றி அரச நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அவசியமானவர்கள் மாத்திரமே வேலைக்கு வருவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் வங்கி முகாமையாளரும், பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ ஆலோசகரான கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களில் செயலணியில் ஈடுபடும் பலரது எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளமை காரணமாக விமான நிலையங்களில் இருக்கக்கூடிய வேலையாட்களின் செயற்பாடுகள் கூட குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான தகவலை எமது ஊடறுப்பு நிகழ்சியில் காணலாம்,
மோசமடையும் கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடுகள்
பலாலி விமான நிலையம் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டாலும், எண்ணெய் இல்லாத காரணத்தினால், விமான நிலையம் திறக்காது தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இரத்மலான விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மத்தல விமான நிலையம் செயலிழந்து உள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விமானங்கள் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருகின்ற விமானங்கள் மாத்திரமே வந்திறங்குகின்றன.
இவ்வாறு வரும் விமானங்கள் கூட இந்தியா, சென்னை அல்லது சிங்கப்பூரிலே தங்களுக்கான எரிபொருளை நிரப்புகிறார்கள்.
சில கார்கோ விமானங்களின் வருகையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக்கு வந்திறங்கினால் அவர்களுக்கான எரிபொருட்கள் இங்கு இல்லாத காரணத்தினால் வருகின்ற விமானங்களும் தங்களுக்கான எரிபொருட்களை தாங்கி வரவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குரிய காப்புறுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri