ஆசிய கோப்பை 2023: பங்களாதேஷிடம் போராடி தோற்ற ஆப்கானிஸ்தான்
ஆசியக் கோப்பை 2023 போட்டியின் 4வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை அணியுடனான போட்டியில் பங்களாதேஷ் தோல்வியடைந்ததால், இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதையடுத்து துடுப்பெடுத்தாடிய செய்த பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது.
மெஹதி ஹசன் மிராஸ் மற்றும் ஷாண்டோ இருவரும் சதம் சிறப்பாக சதம் கடந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு 335 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
We've seen this before. But nevertheless he deserves some appreciation. Keep flying @mushfiqur15 ?#AsiaCup2023 #BANvAFG pic.twitter.com/AC2mSy3obq
— Mushfiqur Rahim Fan Club (@mushfiqurfc) September 3, 2023
தொடக்கமே அதிர்ச்சி
இதன்பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி வீரர் குர்பாஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ஆஃப்கானிஸ்தான் அணி சற்று பொறுமையாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
இதன்பின் சிறப்பாக ஆடிய ஜத்ரான் 51 பந்துகளில் அரைசதம் அடிக்க, பின்னர் அதிரடிக்கு மாறினார். ஆனால் ஹசன் மஹ்முத் பந்துவீச்சில் 75 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, இன்னொரு பக்கம் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசிய அணித்தலைவர் ஷாகிதியும் 51 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 193 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆடுகளத்தை உணர்ந்து பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் பவுன்சர்களை சிறப்பாக பயன்படுத்தி ஓட்டங்களை தடுத்தனர்.
இதனால் அதிரடியாக ஆட முயற்சித்து ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொடுத்தனர்.
இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 245 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் மூலம் வங்கதேச அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.