மண்ணெண்ணெய் விற்பனைக்கு கட்டுப்பாடு - அமைச்சர் அதிரடி அறிவிப்பு
விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இல்லாத பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்வது கட்டுப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக மண்ணெண்ணெய் தேவை இரட்டிப்பாகியுள்ளது என அமைச்சர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போது குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இந்த நாட்களில் நாளாந்தம் சுமார் 550 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மண்ணெண்ணெய் விற்பனையால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளொன்றுக்கு 23 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகின்றது.
நவம்பர் மாதம் 3ஆம் திகதி மின்சார சபை ஆர்ப்பாட்டம் காரணமாக மின்சாரம் தடைப்படும் என கட்டுக்கதை ஒன்று பரவியது. இதனால் அதிகளவில் மண்ணெண்ணெயை மக்கள் கொள்வனவு செய்தமையாலேயே பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கும் நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இல்லை.
இதனால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இல்லாத பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பது கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 17 மணி நேரம் முன்

சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ Cineulagam
