முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகள்! அரச தரப்பிலிருந்து வெளியான எச்சரிக்கை
3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சிறுவயதுக் கற்றல் என்பது செயல்பாடுகள் மற்றும் சமூக இடைவினைகள் சார்ந்தே அமைய வேண்டும் என்றும், டிஜிட்டல் திரைகள் வழியாகக் கற்பது சிறுவர்களின் கவனம் செலுத்தும் திறன், சமூகத் திறன்கள் மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையைப் பாதிக்கும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இணையவழி வகுப்புகள்
தொழில்நுட்பக் கருவிகளுக்குச் சிறுவர்களை அதிகளவில் உட்படுத்துவது அவர்களின் கண் பார்வை மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிப்பதோடு, இயற்கையான உடல் மற்றும் மன வளர்ச்சியைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக நோக்கங்களுக்காகவே இவ்வாறான இணையவழி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், இவை சிறுவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தாது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனவே, சிறுவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான இணையவழி செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு பிள்ளையின் சிறந்த ஆசிரியர் என்பது டிஜிட்டல் திரைகள் அல்ல, மாறாக அவர்கள் வாழும் சூழலும் நேரடி அனுபவங்களுமே என்பதை அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam