பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு தடை- நோன்பு காலத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்
நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெவடகஹ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ் சாலி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் அண்மையில் இறக்குமதி தடை விதிக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலில் பேரீச்சம்பழமும் உள்ளடங்குவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய மரபுகளுக்கு அமைய நோன்பு காலத்தில் இஸ்லாமிய மக்கள் மூன்று பேரீச்சம் பழங்களை உணவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தநிலையில் இஸ்லாமிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 40 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் விவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
எனினும் நோன்பு காலத்திற்கு போதுமான பேரீச்சம்பழம் இல்லை என பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
