பெறுமதி சேர்க்கப்படாமல் கனிம வளங்களை ஏற்றுமதி செய்யத் தடை
இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்படும் கனிம வளங்களை பெறுமதி சேர்க்கப்படாமல் ஏற்றுமதி செய்வதைத் தடைசெய்வதற்கான சட்டமூலம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட தேசிய கனிமக் கொள்கை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்பிரகாரம் நாட்டின் கனிம வளங்களை மதிப்புக் கூட்டல் இல்லாமல் ஏற்றுமதி செய்வது இனிமேல் தடை செய்யப்படும்.
அதன்பிரகாரம் எந்தவொரு கனிம வளங்களையும் மதிப்புக் கூட்டல் இல்லாமல் மூலப்பொருட்களாக ஏற்றுமதி செய்வது இனிமேல் தடை செய்யப்படும்.மேலும், புதிய கொள்கையானது கனிம ஆய்வு, சுரங்கத் தொழில், பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும்.
பாலச்சந்திரனை என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் பாதுகாத்திருப்பேன்! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் உருக்கம்
டொலர் வருமானம்
நீண்ட காலமாக இந்நாட்டின் பெரும்பாலான பெறுமதிமிக்க கனிம வளங்கள் மூலப்பொருட்களாக ஏற்றுமதி சந்தைக்கு அனுப்பப்பட்டிருந்தது.சுட்டிக்காட்டினார்.அதன் காரணமாக இந்நாட்டுக்கு ஏராளமான அந்நியச் செலாவணி இழப்பு ஏற்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, ''நமது கனிம வளங்கள் அனைத்தும் ஏறக்குறைய மூலப்பொருட்களாக ஏற்றுமதி சந்தைக்குச் சென்றுவிட்டன.'' நாட்டின் தேசியப் பொருளாதாரத்தில் சேர்க்கப்பட்டிருக்கக்கூடிய உண்மையான டொலர் மதிப்பு சேர்க்கப்படவில்லை.
உதாரணமாக, நாம் ஒரு தொன்னை 2,000 டாலருக்கு ஏற்றுமதி செய்தால், ஒரு கிலோகிராம் கனிமத்தின் மதிப்பை 20,000 டொலராக உயர்த்தக்கூடியவர்களிடமிருந்து நாம் 2,000 டொலர் வருமானம் ஈட்டியுள்ளோம்.
ஆய்வு, சுரங்கம், பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டல், அதாவது இந்தச் செயல்முறையை ஒழுங்குபடுத்துதல். இது இப்போது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
மகாநதி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... அழுது கண்ணீர்விட்ட நடிகர்கள், எமோஷ்னல் வீடியோ Cineulagam