யாழில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க தடை
சாவகச்சேரி நகராட்சிமன்ற எல்லைக்குற்பட்ட நகர் பகுதிக்குள் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 6ஆவது மாதாந்த சபை அமர்வு நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நகர் பகுதியின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதனால் பொதுப் போக்குவரத்து, அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் தீ பரவும் அபாயம் மற்றும் நகர் பகுதிகள் அசுத்தமடைவதாக உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய தவிசாளர் மயானத்திற்கான அனுமதி வழங்கும் போது நகர் பகுதிக்குள் பட்டாசு வெடிப்பதற்கு தடை என குறிப்பிட்டு எழுத்து மூல அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது.
இருப்பினும், யாரும் பின்பற்றப்படுவதில்லை ஆனால் நேற்று முதல் இந்நடைமுறை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மீறுபவர்களுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam