பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள மாற்றம்
விலை அதிகரிப்பு காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால், பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம்
இதனால் பாண் விற்பனை 40 சதவீதத்தால் குறைந்துள்ளதுடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விற்பனை 25 சதவீதத்தால் குறைந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கு 50 ரூபா விதிக்கப்பட்டுள்ளது, முட்டை விலை அதிகரித்துள்ளது மற்றும் வெண்ணெய்க்கும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10 வீதமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், மின் கட்டணம் 21.9 வீதத்தால் குறைக்கப்பட்ட போதிலும், பேக்கரி உரிமையாளர்கள் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்கவில்லை எனவும் விதானகே தெரிவித்துள்ளார் .





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
