450 கிராம் பாணின் நிறையைக் குறைக்குமாறு யோசனை
பாணின் விலையை குறைக்கவேண்டுமா? நிறையைக் குறைக்குமாறு யோசனை பாணின் நிறையை குறைத்தால், விலையையும் குறைக்கமுடியும் என்று அரசாங்கத்திடம் வெதுப்பக உாிமையாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பாணின் நிறையை 5 கிராமினால் குறைத்தால், அதன் விலையையும் 5ரூபாவினால் குறைக்கமுடியும் என்று அகில இலங்கை வெதுப்பக உாிமையாளர் சங்கத்தின் தலைவர் என். கே. ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
450 கிராமே தற்போது இலங்கையில் பாணுக்கான அனுமதிக்கப்பட்ட நிறையாக உள்ளது.
பாரிய உற்பத்திகளை மேற்கொள்ளும் வெதுப்பகங்கள் அனுமதிக்கப்பட்ட நிறையில் பாணை உற்பத்தி செய்து வருகின்றன.
எனினும் கிராமப் புறங்களில் பாணின் நிறை குறைந்தளவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
கோதுமாவின் விலையை இறக்குமதி நிறுவனங்கள் 17 ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ளமையை அடுத்து பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam