அரசாங்கத்தின் உத்தரவை மதிக்காத பேக்கரி உரிமையாளர்கள்! சிக்கலில் நுகர்வோர்
இலங்கையில் உணவக மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் அரசாங்கத்தின் உத்தரவை மதிப்பதில்லை என்று நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையும் குறிப்பிடத்தக்க அளவிலும் அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டு, அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
பேக்கரி உரிமையாளர்கள் மதிக்கவில்லை

இந்நிலையில் இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் அரசாங்கத்தின் அறிவிப்பை பேக்கரி உரிமையாளர்கள் மதிக்கவில்லை என்று நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அரசாங்கத்தின் அறிவித்தல்கள் வெறுமனே அறிவிப்புகளாக மாத்திரம் நின்றுவிடுவதன் காரணமாக நுகர்வோர் பெரும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam