சர்ச்சையை ஏற்படுத்திய பெயர்ஸ்டோவின் ஆட்டமிழப்பு: அஸ்வின் கூறிய விளக்கம்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலாக ஆஷஸ் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் 5ஆம் நாளில் ஜானி பெயர்ஸ்டோ ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
அதாவது பந்தை விட்டதும் கிரீஸில் தனது காலால் மித்திது விட்டு நடக்கத் தொடங்கி விடுவார்.
நடுவர்களோ யாருமே ஓவர் முடிந்து விட்டதற்கான சிக்னலை கொடுக்கும் முன்னமே வேகமாக கிரிஸை விட்டு நகர்ந்து விடுவார்.
விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி பந்தை பிடித்ததும் தாமதிக்காமல் விக்கட்டினை நோக்கி அடித்து விடுவார். அவர் அடிக்கும் சமயத்தில் பெயர்ஸ்டோ வெளியே இருப்பார்.
BAIRSTOW IS RUN-OUT.
— Johns. (@CricCrazyJohns) July 2, 2023
WHAT A MOMENT IN ASHES.pic.twitter.com/Dw4EFpt0x3
அதனால் மூன்றாம் நடுவர் விக்கெட் என தீர்ப்பு வழங்கினார். ஒருபுறம் பென் ஸ்டோக்ஸ் இருக்க மறுபுறம் இந்த விக்கெட் மிக முக்கியமானதாக இருந்தது.
ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்த இந்த விக்கெட்டினை இங்கிலாந்து ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் விவாதப் பொருளானது.
இறுதியில் ஆஸி. அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் ஐபிஎல்லில் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் விக்கெட்டினை ரன் அவுட் செய்வார்.
அதை மன்கட் என முன்பு அழைத்து வந்தனர். பந்துவீச்சாளர் பந்தினை போடும்முன் துடுப்பாட்ட வீரர் கிரீஸை விட்டு வெளியேறினால் பந்து வீச்சாளர்கள் விக்கட்டினை அடித்து ஆட்டமிழக்க செய்யலாம்.
இது மிகப்பெரிய விவாதத்தினை ஏற்படுத்தியது. தற்போது உலக அளவில் பலரும் இதை செய்து வருகின்றனர்.
பெயர்ஸ்டோ விக்கெட்டிற்கு அஸ்வின் தனது ட்விட்டர் பகத்தில் கூறியதாவது,
உண்மையை நாம் சத்தமாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும். பெயர்ஸ்டோ செய்தது போல அடிக்கடி பந்தினை விட்டதும் கிரீஸை விட்டு வெளியேறுவதை அவரோ அவரது அணியினரோ கவனித்திருக்க வேண்டும்.
விக்கட் காப்பாளர் தாமதிக்காமலே விக்கெட்டினை நோக்கி அடித்தது நியாயமான ஆட்டமிழப்பு.
நாம் நிச்சயமாக இந்த விஷயத்தில் தனிப்பட்ட ஒருவரின் ஆட்ட நுணுக்கத்தினை பாராட்ட வேண்டுமே தவிர தவறாக விளையாடி விட்டார் அல்லது (spirit of the game) ஐ அழித்து விட்டார் எனவோ கூறக்கூடாது.