பௌசிக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை
அரசாங்க வாகனம் ஒன்றை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் பௌசிக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு அமைச்சுக்கு நெதர்லாந்தினால் வழங்கப்பட்ட கார் ஒன்றை தமது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியதன் ஊடாக அரசாங்கத்துக்கு சுமார் 10 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம்
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் திறந்த நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இன்று (24.02.2023) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரைப் பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



