வவுனியா ஆசிரியர் ஒருவருக்கு முகநூலில் அவதூறை ஏற்படுத்திய நபருக்கு பிணை
வவுனியாவில் (Vavuniya) ஆசிரியர் ஒருவருக்கு போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தி கைது செய்யப்பட்ட நபர் நேற்று (04.07.2024) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த தரணிக்குளம் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், கிராம அலுவலரின் ஆதரவுடன் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில், கிராம அபிவிருத்தி சங்கம் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால், குறித்த ஆசிரியருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலி முகநூலில் அவர் தொடர்பாக தவறான தகவல்கள் பகிரப்பட்டதுடன், தொலைபேசியிலும் ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டிருந்தது.
பொலிஸார் விசாரணை
பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஜனாதிபதி செயலகம், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, ஒம்புட்ஸ்மன், மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர் என பலரிடமும் முறையிட்டதுடன், குறித்த சம்பவம் தொடர்பில கணனி பயன்பாட்டு கட்டுப்பாட்டு பிரிவு பொலிஸாருக்கும் முறைபாடு செய்திருந்தார்.
அதனையடுத்து, இது தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், முகநூல் கிராம அலுவலருடையது என்பதை கண்டறிந்ததுடன் அதனை முடக்கியதோடு மிரட்டல் விடுத்த கிராம அலுவலரையும் கைது செய்திருந்தனர்.
சரீர பிணை
இந்நிலையில், வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் தொலைபேசியில் அச்சுறுத்தியமை மற்றும் போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து, வழக்கு விசாரணை இடம்பெற்ற போது, மன்றின் கட்டளைக்கு அமைய நீதிமன்ற சிறையில் அடைக்கப்பட்ட கிராம அலுவலர் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

22 நாள் சிறை, 17 ஆண்டுகள் சட்ட போராட்டம்! சிறிய எழுத்துப்பிழையால் பறிபோன நபரின் வாழ்க்கை News Lankasri
