இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிணை
இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து குஜராத் மாநிலத்தின் சூரத் நகரிலுள்ள நீதிமன்றம் கடந்த 23 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.
குறிப்பிட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை ஏப்ரல் 13 ஆம் திகதி வரை குஜராத் நீதிமன்றம் இன்று நீடித்துள்ளது.
மேல்முறையீட்டு மனு
ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீதான அடுத்த விசாரணையை எதிர்வரும் மே 3 ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு ஏப்ரல் 13 ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.
‘மோடி’ என்ற பெயர் ஒவ்வொரு திருடனுக்கும் பொருந்தும் என 2019 இல் ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
