மகிந்தவின் இல்லத்திற்கு எதிரில் கைதானவர்கள் இரவோடு இரவாக பொலிஸ் பிணையில் விடுவிப்பு
தங்காலையில் அமைந்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு எதிரில் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத ஒன்று கூடல் மற்றும் பேருந்து மீது தாக்குதல் நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நள்ளிரவிலயே குறித்த நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதானவர்களுக்காக சுமார் 18 சட்டத்தரணிகள் நீதவான் எதிரில் முன்னிலையாகியிருந்தனர்.
இதேவேளை, இந்த போராட்டத்தின் போது சில பொலிஸ் உத்தியோகத்தர்களும், போராட்டக்காரர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.



