நாமலின் பிரத்தியேக செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்கவை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சந்தேக நபரை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்துள்ளது.
பிணை
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்க நேற்றையதினம்(19.10.2026) இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையான நிலையிலேயே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 2-வில் கேமியோ.. ஆனால், இயக்குனர் நெல்சனின் அடுத்த படத்தின் ஹீரோ.. வேற லெவல் கூட்டணி Cineulagam