சட்டத்தரணி ஹிஜாஸுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை! - சட்ட மா அதிபர்

Colombo Law Court Hejaaz Hizbullah
By Murali Jan 21, 2022 12:26 PM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை வழங்குவதில் தமது தரப்பில் எதிர்ப்புகள் இல்லை என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

விளக்கமறியலில் உள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீதான வழக்கு விசாரணை கடந்த 28ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில், பிணை கோரப்படுவதற்கு தமது தரப்பில் எதிர்ப்புகள் இல்லை என சட்ட மா அதிபரால் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், மிக மோசமான சட்டமாக கருதப்படும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் நேற்று வியாழக்கிழமை முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையின் பின்னர் குற்றம்சாட்டப்பட்டவரின் பிணை மனுவை எதிர்க்கப் போவதில்லை என சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இதன்படி, மறுசீராய்வு மனுவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி மீள அழைக்குமாறு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இருதரப்பு சட்டத்தரணிகளுக்கும் தெரிவிக்குமாறு உத்தரவிட்டது.

சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் பணிப்புரைக்கமைய மனுதாரர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, ஷானக குரே மற்றும் நிரான் அங்கடெல் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற சட்டத்தரணி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், ஏப்ரல் 2020 இல் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் மதரஸாவில் விரிவுரை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்கள் இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US