மயிலத்தமடுவில் கைது செய்யப்பட்ட பண்ணையாளர்களுக்கு பிணை
மட்டக்களப்பு - மயிலத்தமடு பகுதியில் வைத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்ட பண்ணையாளர்கள் இருவரையும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த 01.05.2024 அன்று காலை 10.00 மணியளவில் மயிலத்தமடு பகுதியில் பண்ணையாளர்கள் இருவர் மகாஓயா வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு அவர்கள் மீது தெஹியத்தக்கண்டிய நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு பதிவு
குறித்த இருவருக்கும் எதிர்வருக்கும் எாிரான முறைப்பாடு தொடர்பில் எதிர்வரும், 10.05.2024 அன்று வழக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்டவர்கள் சித்தாண்டி பகுதியை சேர்ந்த செல்லத்தம்பி சிவச்சந்திரன், சீனித்தம்பி ரவீநாதன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிடிக்கப்பட்ட இவரும் பண்ணையில் காலை உணவு உண்னும் போது வாடிக்கு வந்த வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள், “உங்களோடு கதைக்க வேண்டும் வாருங்கள்” என கூறி அழைத்து சென்று மகாஓயா வனபரிபாலன திணைக்கள அலுவலகத்தில் 3.00 மணிவரை வைத்திருந்து மாலை 6.00 பிணையில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |