இணையம் மூலமான நிதி மோசடி: 25 சீன பிரஜைகளுக்கு பிணை
இணையம் மூலமான நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 சீன பிரஜைகள் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த நிதி மோசடி சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களுடன் கைது செய்யப்பட்ட பெருமளவிலான இலத்திரனியல் உபகரணங்களை ஆராய வேண்டியிருப்பதால், பொலிஸ் கணினி குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவினர் தமது விசாரணைகளை இன்னும் முடிக்கவில்லை.
சரீர பிணையில் விடுவிப்பு
குறித்த 25 சீன சந்தேகநபர்களை தலா 500,000 ரூபா சரீர பிணையில் செல்ல களுத்துறை நீதவான், கடந்த 14 ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தார்.
அத்துடன் அடுத்த விசாரணையை ஜூன் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்
இதற்கு புறம்பாக சட்டவிரோத சிகரெட்களை வைத்திருந்த சந்தேகநபர்களில் ஒருவர்
500,000 ரூபாய் அபராதத்தை கடந்த புதன்கிழமை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.