இந்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ரோங் கொலை : அரசியல்வாதி ஒருவர் கைது
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி (Bahujan Samaj Party) தலைவர் ஆம்ஸ்ட்ரோங் (Armstrong) கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பாரதிய ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட அஞ்சலையும் கைது செய்துள்ளதாக இந்நிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓட்டேரி பகுதியில் வைத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ரோங் கடந்த 5ஆம் திகதியன்று அவரது வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட குழுவினர் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.
கொலைச்சம்பவம்
இந்தநிலையில் கொலை சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக்கழக சட்டத்தரணி அருள், பாரதிய ஜனதாவின் நிர்வாகியான செல்வராஜ், அண்ணதா திராவிட முன்னேற்றக்கழக நிர்வாகி மலர்கொடி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸின் ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பாரதிய ஜனதாவின் சென்னை வடமேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan