அட்டாளைச்சேனையில் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான உரைப் பைகள் கொள்ளை
கடையை உடைத்து களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உரைப் பைகளை
கொள்ளையடித்த சம்பவம் அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, அட்டாளைச்சேனை ஆலங்குளம் வீதியிலுள்ள கடை ஒன்றின் கதவை உடைத்து அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான உரப் பைகளை கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளை சம்பவத்தின் பின்னணி
இந்த சம்பவம் நேற்று(31) இரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள கடை ஒன்றில் அதன் முதலாளி நெல் அறுவடையின் வியாபாரத்துக்காக உரைப் பையை களஞ்சியப்படுத்தி வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் களஞ்சியபடுத்திய கடைக்கு சென்ற போது கடை கதவின் பூட்டை இரும்பு வாளால் வெட்டி உடைத்து அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உரைப் பைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணை
இது தொடர்பான மேவதிக விசாரணைகளை சம்பவ இடத்துக்கு சென்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
