பதுளை மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்
காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சிறப்பு மயக்கவியல் வைத்திய நிபுணரான பிரபாத் அனுராத தயரத்ன என்பவரே நேற்று காலை (24) சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மஹியங்கனை வனப்பகுதியில் சுமார் 800 மீட்டர் தொலைவில் பாறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணம் தொடர்பில் வெளியான தகவல்
மர்மமான முறையில் உயிரிழந்த வைத்தியரின் உடலுக்கு அருகில் 3 வகையான மருந்து மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதன் காரணமாக வைத்தியர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையில், பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச வைத்தியரின் மரணம் தொடர்பில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
நேற்று காலை சுமார் 10.00 மணியளவில் பிரபாத்துக்கு அறுவை சிகிச்சை இருந்தது. அதன் பிறகு, அவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. என்ன நடந்தது என்பதை எங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.தனது கடமையை முறையாகச் செய்தவர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற சிறப்பு வைத்தியர் பிரபாத் அனுராதா, இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக மருந்து உட்கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆபத்தான நபர்..! பல மணிநேரம் வாக்குமூலமும் பதிவு
இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பெரும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் - அதிரடியாக முடக்கப்படும் சொத்துக்கள்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9