பதுளை - பிபில வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு
பதுளை - பிபில வீதியில் 143 மற்றும் 144 ஆவது கிலோமீற்றர் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த வீதி போக்குவரத்துக்காக, இன்று (25) காலை 6.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.00 மணி முதல் நாளை (26) காலை 6.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலநிலை
இதேவேளை நிலவும் காலநிலைக்கு ஏற்ப வீதியின் திறக்கும் நேரம் மாறலாம் எனவும், குறித்த இடத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காக பசறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீதிக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 18.11.2024 முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்னர் நேற்று (24) அந்த இடத்தை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam