சீரற்ற காலநிலை! மட்டக்களப்பு மாவட்ட நிலவரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழைகாரணமாக எழுவான்கரையிலிருந்து படுவான்கரைப்பகுதிக்கான அனைத்து போக்குவரத்துப்பாதைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளுராட்சிமன்றங்களினால் போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகம்,மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கான போக்குவரத்துப்பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பட்டிருப்பு பாலத்தின் ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கான போக்குவரத்துகளும் மண்முனைப்பாலத்தின் ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதனால் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கான போக்குவரத்துகளும் வலையிறவுபாலம் மற்றும் சுமைதாங்கியடி ஊடாக வெள்ள நீர் பாய்வதன் ஊடாக மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கான போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக எழுவான் கரையிலிருந்து படுவான்கரைக்கு செல்வோரும் படுவான்கரையிலிருந்து எழுவான் கரைக்கு வருவோரும் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அவசர தேவைக்காக செல்வோரின் நன்மை கருதி உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக உழவு இயந்திரங்கள் ஊடாக போக்குவரத்துகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதேபோன்று மட்டக்களப்பு நகருக்கு வரும் பிரதான வீதியான திருமலை-மட்டக்களப்பு வீதியுடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக போக்குவரத்துச்செய்வதில் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டுவருகின்றனர்.
வெள்ள அனர்த்தகாலத்தில் போக்குவரத்துச்செய்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை விடுத்துவருகின்றது.தேவையற்ற வகையில் அனர்த்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan