சீரற்ற காலநிலை! மட்டக்களப்பில் போக்குவரத்து தடை

Weather Floods In Sri Lanka
By Kumar Nov 29, 2025 02:45 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய மழையுடனான காலநிலை நேற்று முதல் சீரடைந்துள்ள நிலையில் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பிவரும் நிலையில் சில இடங்களில் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ள நிலையிலேயே காணப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரைக்கும் படுவான்கரைக்கும் இடையிலான போக்குவரத்துகள் தடைப்பட்டிருந்தன.

போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான போக்குவரத்து வெல்லாவெளி-மண்டூர் வீதி,பட்டிப்பு-வெல்லாவெளி வீதி,பாலையடிவட்டை-வெல்லாவெளி வீதி ஆகிய வீதியுடனான போக்குவரத்தும் பட்டிப்பளை பிரதேசத்திற்கான மண்முனைப்பாலம் உடனான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தன.

இதேபோன்று வவுணதீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து வலையிறவு பாலம் ஊடாக பாய்ந்த வெள்ள நீர்காரணமாக தடைப்பட்டிருந்தது.

இந்த நிலையில் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான போக்குவரத்துகள் இன்றைய தினம் வழமைக்கு திரும்பிய நிலையில் வவுணதீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.

இதேபோன்று மண்முனை தென் மேற்று பட்டிப்பளை பிரதேசத்திற்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் அதன் ஊடாக அவதானமாக போக்குவரத்துகளை முன்னெடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக போக்குவரத்துகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் மட்டக்களப்பு நகருக்கும் திருகோணமலை வீதிக்கும் இடையிலான பகுதிகளில் வெள்ள நீர் பாய்வதன் காரணமாக சிறிய வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படாத நிலையில் மாற்று வீதிகள் ஊடாக வாகனங்களை பயணிக்கசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த 07குடும்பங்கள் மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சமைத்த உணவுகளை பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டுவருகின்றன. பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் கிறேஸ்குமார் முகாம்களுக்கு சென்று அங்குள்ளவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, பட்டிப்பளை,போரதீவுப்பற்று,களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான பல்வேறு செயற்பாடுகளை மின்சாரசபை மேற்கொண்டுவருகின்றது. தற்பொழுது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 11,407 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து181 பாதிக்கப்பட்டுள்ளதாக. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட அனைத்து முக அமைப்பு பிரிவு பிடித்துள்ள அறிக்கையில் இன்று(29) பிற்பகல் 4 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 7492 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரத்து 556 பேர் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கி இருப்பதாகவும். அத்துடன் 16 நலன்புரி நிலையங்களில் 1296 குடும்பங்களை சேர்ந்த பதினாறு பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருப்பதாக.

அறிவிக்கப்படுகிறது இதேவேளை நண்பர் உறவினர் வீடுகளில் 7,492 குடும்பங்களை சேர்ந்த 20556 பேர். தங்கி இருப்பதாகவும் இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நலன்புரி நிலையங்களில் தங்கி இருப்பவர்களுக்கான சமைத்த உணவு வழங்க நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ் அருள்ராஜ் தெரிவித்தார். இதே வேளையில் இந்த வெள்ள அனர்த்தத்தில் 610 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்து இருப்பதாகவும் இந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US