களுதாவளையில் சரிந்து விழுந்த பாரிய மரம்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் கோயில் விதியிலிருந்த பாரிய வேம்பை மரம் ஒன்று காற்றினால் வெள்ளிக்கிழமை(28.11.2025) சரிந்து முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதியிலிருந்த மின்கம்பங்ளுக்கும், மின்னிணைகப்புக் கம்பிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு விரைந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் யோ. சந்திரகுமார், இலங்கை மின்சரை சபையின் களுவாஞ்சிகுடி காரியாலய உத்தியோகஸ்த்தர்கள், பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள், அப்பகுதி பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் ஒன்றிணைந்து சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர்.


ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri