நுவரெலியாவில் பலத்த மழை : வெள்ளத்தால் போக்குவரத்துக்கு இடையூறு
நுவரெலியாவில் இன்று (27) பிற்பகல் சுமார் ஒரு மணித்தியாலயம் பெய்த இடியுடன் கூடிய பலத்த மழை காரணமாக பிரதான வீதிகளில் சிறிது நேரம் போக்குவரத்துக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது.
இதில் நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு முன்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதில் நுவரெலியா - கண்டி, நுவரெலியா - ஹட்டன் போன்ற பல பிரதான வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மேலும் நுவரெலியாவில் சில தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அதிகமான விவசாய நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
அத்துடன் அதிகமாக மரக்கறி வகைகள் வெள்ளத்தில் அள்ளுண்டுபோயுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.



சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam