கந்தளாயில் வெள்ள அபாயம்...
கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுற கிராமத்தைச் சேர்ந்த 190 க்கும் மேற்பட்ட மக்கள் இன்று ( 29) ஏற்பட்ட வெள்ள அபாயம் காரணமாக அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு இடப்பெயர்ந்துள்ளனர்.
அபாய எச்சரிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சமகிபுற கிராமத்தை ஒட்டியுள்ள கெங்கை ஆறு உடையும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றுப்பகுதியை பலப்படுத்துவதற்காக, தற்போது அங்கு மண் மூட்டைகளை அடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வெள்ள அபாயம் காரணமாக, சுமார் 190 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள சூரியபுர மகாவலி வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்காக தங்குமிடத்தில் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமகிபுற கிராம மக்களை வெளியேற்றும் பணியில் பொலிசார், விசேட பொலிசார், இராணுவத்தினர், ஊர்காவல் படையினர் மற்றும் பொதுமக்களும் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam