முல்லைத்தீவில் தொடரும் சீரற்ற காலநிலை : போக்குவரத்து பாதிப்பு
முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று (27) மரம் சரிந்து விழுந்துள்ளது.
இதனால். குறித்த இடத்தில் வீதிப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.
பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு
இவற்றை விரைந்து அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணியாளர்கள், பிரதேச சபை பணியாளர்கள், மின்சார சபை பணியாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவுடன் இணைந்து விழுந்த மரத்தை அகற்றும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பின் தொலைபேசி கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதுடன் தற்போது அவற்றை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தினால் கம்பங்களின் இணைப்புக்கள் மிகவும் தாழ்நிலையில் காணப்படுவதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு கனக ரக வாகனங்கள் போன்ற எந்தவொரு பெரிய வாகனங்களும் இவ் வீதியை பயன்படுத்த வேண்டாம் என்பதனை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam