நுவரெலியாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை : போக்குவரத்து பாதிப்பு
நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் நுவரெலியா கந்தப்பளை - ஹைபொரஸ்ட் இலக்கம் 03 பகுதியில் ஏற்பட்ட வெள்ள நீர் பரவலால் பிரதான வீதிகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால்
நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக பிற்பகல் நேரத்தில் பெய்து வரும் மழை காரணமாக கந்தப்பளை - ஹைபொரஸ்ட் இலக்கம் 03 பகுதியில் தாழ்நிலப் பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்ட போதிலும் பெய்த மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்களில் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகமான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 10 மணி நேரம் முன்

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
