கொழும்பின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியை செய்த மோசமான செயல்
கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
34 வயதுடைய ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை நான்கு வருடங்களாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும்,பாதிக்கப்பட்ட மாணவனுக்கு தற்போது 20 வயது எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியை தனது அடையாள அட்டையை பயன்படுத்தி கல்கிசை பகுதியில் உள்ள ஹோட்டலில் முன்பதிவு செய்து மோசமான செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri