ஆசிரியரின் மோசமான செயல்! தவறான முடிவெடுத்த மாணவி
பாடசாலை மாணவியொருவர் சில மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்டுபத பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வகுப்பு ஆசிரியரால் பாலியல் வன்புணர்விற்கு ஆளானதன் காரணமாகவே குறித்த மாணவி இவ்வாறான தவறான முடிவை எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (05.08.2023) இடம்பெற்றதாக கட்டுபத பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரிடம் வழங்கிய வாக்கு மூலம்
கொஸ்தெனிய, சியம்பலாவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 23ம் திகதி வகுப்பு ஆசிரியர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்து மாத்திரை உட்கொண்டதாவும் மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், கட்டுபத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த மாணவி மேலதிக சிகிச்சைக்காக குளியாபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
